செயலாளர் அறிக்கை - செப்டம்பர் 2025
01.09.2025 : திங்கட்கிழமை அன்று மாலை 4.30 மணிக்கு ஈடிசியாவின் 4வது நிர்வாகக்குழு கூட்டம் தலைவர் திரு.கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஈடிசியாவின் செயலாளர் திரு.சரவணபாபு, பொருளாளர் பரத் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.
08.09.2025 : திங்கட்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு CII Erode Zone ஏற்பாடு செய்திருந்த GST 2.0 கலந்துரையாடல் கூட்டம் ஆன்லைனில் Zoom மீட்டிங்காக நடைபெற்றது. இதில் ஈடிசியா சார்பாக நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.
13.09.2025 : காலை 9.00 மணிக்கு பெருந்துறையில் உள்ள கொங்கு இன்ஜினியரிங் கல்லூரியில் ஈரோடு JCI, ரோட்டரி, CII போன்ற அமைப்புகள் இணைந்து நடத்திய ஈரோடு வர்ணம் விழாவின் துவக்கவிழாவை ஈரோடு மாவட்ட ஆட்சியர் உயர்திரு. ச.கந்தசாமி அவர்கள் துவக்கி வைத்தார். இவ்விழாவில் ஈடிசியா சார்பாக தலைவர் திரு.கந்தசாமி, முன்னாள் தலைவர் திரு.திருமூர்த்தி, துணைத்தலைவர் திரு.சுரேஷ், இணைச் செயலாளர் திரு.சக்திவேல் மற்றும் ஈடிசியா உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
15.09.2025 : திங்கட்கிழமை அன்று மாலை 6.00 மணிக்கு ஈடிசியாவின் 3வது செயற்குழு கூட்டம் தலைவர் திரு.கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கோவை ESI Corporation, இணை இயக்குநர் திரு. இசக்கி சிவா அவர்கள் கலந்துகொண்டு SPREE Scheme 2025 என்ற தலைப்பில் ESI குறித்த விளக்கங்கள் அளித்தார். Digital Marketing Coach திரு.செல்வகுமார் அவர்கள் தொழில்நுட்பம் மூலம் பிசினஸ் வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் ஈடிசியாவின் செயலாளர் திரு.சரவணபாபு, பொருளாளர் திரு.பரத், முன்னாள் தலைவர்கள் மற்றும் நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
16.09.2025 : செவ்வாய்கிழமை அன்று ஈடிசியாவின் நீண்ட நாள் கோரிக்கையான ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிட்கோ தொழிற்பேட்டையில் வேளாண் பொருட்கள் உற்பத்தி சார்ந்த தொழில் முனைவோர்களுக்காக ரூ.15.23 கோடி மதிப்பிட்டில் புதிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். இதற்கான நிகழ்ச்சி பெருந்துறை சிப்காட்டில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் அரசு உயர் அதிகரிகளுடன் ஈடிசியா தலைவர் திரு.கந்தசாமி, முன்னாள் தலைவர் திரு.திருமூர்த்தி, துணைத்தலைவர் திரு.சுரேஷ், இணைச் செயலாளர் திரு.சக்திவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
23.092025 : செவ்வாய்கிழமை ஈரோடு-சேலம் Export Promotion Centre இணைந்து நடத்திய ஏற்றுமதியாளர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி சேலம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் வளாகம், சேலத்தில் நடைபெற்றது. இதில் ஈடிசியா சார்பாக செயலாளர் திரு.சரவணபாபு கலந்துகொண்டார்.
23.09.2025 : VET Institute of Arts & Science கல்லூரியில் நடைபெற்ற “Startup Conclave-2025” -ஐ ஈடிசியாவின் தலைவர் திரு.கந்தசாமி அவர்கள் தொடங்கி வைத்து மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். இக்கல்லூரியின் முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஈடிசியாவின் செயலாளர் திரு.சரவணபாபு, இணைச் செயலாளர் திரு.சக்திவேல், ஈடிசியாவின் பொதுமேலாளர் திரு.கிளமெண்ட் ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். நமது ஈடிசியாவும் VET Institute of Arts & Science கல்லூரியும் மாணவர் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.
24.09.2025 : புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு முன்னாள் தலைவர்கள் மற்றும் நிர்வாகக்குழு கலந்துகொண்ட சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் தலைவர் திரு.கந்தசாமி அவர்கள் தலைமையில் ஈடிசியா சக்தி மசாலா கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நடைபெற உள்ள TANSTIA தேர்தலில் ஈடிசியா பங்கேற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஈடிசியாவின் முன்னாள் தலைவர்கள் மற்றும் நிர்வாகக் குழுவினர் கலந்துகொண்டனர்.
27.09.2025 : ஸ்ரீ சண்முகா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி நடத்திய முதலாமாண்டு மாணவர்களுக்கான Validation Ceremony நிகழ்ச்சியில் ஈடிசியாவின் தலைவர் திரு.கந்தசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர், நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஈடிசியாவின் பொருளாளர் திரு.M.K.K.பரத் அவர்கள் கலந்துகொண்டார்.இந்நிகழ்ச்சியின்போது, ஸ்ரீ சண்முகா கல்லூரிக்கும் நமது ஈடிசியாவுக்கும் இடையே ஒரு சிறப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
29.09.2025 : திங்கட்கிழமை மாலை 3.00 மணிக்கு படித்து வேலையில்லா இளைஞர்களுக்காக அரசு வழங்கும் கடனுதவித் திட்டமான UYEGP திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு ஈரோடு மாவட்ட தொழில் மையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தொழில் மையத்தின் பொதுமேலாளர் திரு. G.திருமுருகன் மற்றும் அதிகாரிகளுடன் தேர்வுக்குழு உறுப்பினராக ஈடிசியா சார்பாக பொருளாளர் திரு.M.K.K.பரத் மற்றும் ஈடிசியாவின் மேலாளர் திரு.கிளமெண்ட் ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளைத் தேர்வு செய்தனர்.
