செயலாளர் அறிக்கை - ஆகஸ்ட் 2025
04.08.2025 : திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில்முனைவோர்க்கான கடனுதவி வழங்கும் அரசின் திட்டங்களான AABCS மற்றும் NEEDS திட்டங்களின் கீழ் பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு அதிகரிகரிகள் மற்றும் வங்கி நிர்வாகிகளுடன் தேர்வுக்குழு உறுப்பினராக ஈடிசியாவின் சார்பாக தலைவர் திரு. P.கந்தசாமி அவர்கள் கலந்துகொண்டார்.
04.08.2025 : திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு ஈரோடு மாவட்ட தொழில் மையத்தில் நடைபெற்ற கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வில் மாவட்டத் தொழில் மையத்தின் பொதுமேலாளர் திரு. G.திருமுருகன் அவர்களுடன் தேர்வுக்குழு உறுப்பினராக நமது ஈடிசியாவின் சார்பாக இணைச் செயலாளர் திரு.S.சக்திவேல் அவர்கள் கலந்துகொண்டார்.
05.05.2025 : செவ்வாய்க்கிழமை அன்று பெருந்துறை, சிப்காட்டில் நடைபெற்ற SPREE SCHEME 2025 (முதலாளிகள் மற்றும் பணியாளர்களின் பதிவை மேம்படுத்துவதற்கான திட்டம்) என்ற கூட்டத்தில் ஈரோடு மாவட்ட சிறுதொழில்கள் சங்கம் சார்பாக தலைவர் திரு. P.கந்தசாமி, செயலாளர் திரு.A.சரவணபாபு, இணைச் செயலாளர் திரு.S.சக்திவேல் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
07.08.2025 : வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னையிலிருந்து தமிழ்நாடு சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கத்தின் (TANSTIA) நிர்வாகிகள் TANSTIA தேர்தல் தொடர்பாக நமது ஈடிசியா நிர்வாகக்குழு உறுப்பினர்களைச் சந்தித்தார்கள். இந்நிகழ்வில் ஈடிசியா தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
09.08.2025 : சனிக்கிழமை ஈடிசியாவின் நிர்வாகக்குழு கூட்டம் 3வது நிர்வாகக்குழு கூட்டம் தலைவர் அவர்கள் தலைமையில் ஈடிசியா அலுவலகத்தில் திரு.P.கந்தசாமி
நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஈடிசியா செயலாளர் திரு.A.சரவணபாபு, பொருளாளர் திரு.M.K.K.பரத் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
11.08.2025 : திங்கட்கிழமை நமது ஈரோடு நகரில் மக்கள் சிந்தனைப் பேரவை நடத்திய புத்தகத் திருவிழாவில் ஈடிசியாவும் பங்குபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி நூலகங்களுக்கு ஈடிசியா சார்பாக புத்தகங்கள் நன்கொடையாக வழங்குவது என்று உறுதியளிக்கப்பட்டது.
13.08.2025 : புதன்கிழமை அன்று ஈடிசியா சார்பாக வெள்ளோடு அரசு மேல்நிலைப்பள்ளி, ஊஞ்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் குருவ ரெட்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் நூலகங்களுக்கு அலமாரிகளுடன் புத்தகங்களை நமது ஈடிசியாவின் தலைவர் திரு.P.கந்தசாமி மற்றும் இணைச் செயலாளர் திரு.S.கார்த்திகேயன் ஆகியோர் நேரில் சென்று அன்பளிப்பாக அளித்தனர்.


15.08.2025 : வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு நமது இந்தியாவின் 79வது சுதந்திர தினம் ஈடிசியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஈடிசியாவின் தலைவர் திரு.P.கந்தசாமி அவர்கள் தேசியக்கொடி ஏற்றினார்கள். ஈடிசியாவின் முன்னாள் தலைவர்கள் சிறப்புரையாற்றினார்கள். இவ்விழாவில் ஈடிசியாவின் செயலாளர், பொருளாளர், முன்னாள் தலைவர்கள், நிர்வாகக் குழுவினர் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
17.08.2025 : ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள P.K.R. மகளிர் கலைக் கல்லூரியும், தொழில் நிறுவன கூட்டாண்மை மையமும் (IIPC) இணைந்து மாணவர்களுக்காக “கல்வி மற்றும் தொழில்துறைக்கு இடையிலான இடைவெளியைக் குறைத்தல் மற்றும் புரிந்துணர்வு” என்ற தலைப்பில் நடத்திய சிறப்பு நிகழ்ச்சியில் ஈடிசியாவின் தலைவர் திரு.P.கந்தசாமி, துணைத்தலைவர் திரு. P.சுரேஷ், இணைச் செயலாளர் திரு.S.சக்திவேல், முதல்வர், நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.


18.08.2025 : திங்கட்கிழமை மாலை 6.30மணிக்கு ஈடிசியாவின் 2வது செயற்குழு கூட்டம் கூட்ட தலைவர் திரு.P.கந்தசாமி அவர்கள் தலைமையில் ஈடிசியா அரங்கில் நடைபெற்றது. i2i Foundation Afrea Manager திரு. சி.சந்தோஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, “MSME வளர்ச்சிக்கு Flipkart மற்றும் Walmart Vriddhi தளங்களைப் பயன்படுத்துதல்” என்ற தலைப்பில் விளக்கமளித்தார். இக்கூட்டத்தில் ஈடிசியாவின் நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
19.08.2025 : செவ்வாய்கிழமை மதியம் 3.00 மணிக்கு ஈரோடு மாவட்ட தொழில் மையத்தில் நடைபெற்ற வேலையில்லா இளைஞர்களுக்காக அரசு வழங்கும் UYEGP கடன் உதவித் திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வில் மாவட்ட தொழில் மையத்தின் பொதுமேலாளர் திரு.திருமுருகன் மற்றும் அதிகாரிகளுடன் தேர்வுக்குழு உறுப்பினராக ஈடிசியாவின் செயலாளர் திரு.A.சரவணபாபு அவர்கள் கலந்து கொண்டார்.
28.08.2025 : வியாழக்கிழமை மதியம் 3.30 மணிக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தொழில்முனைவோர்க்கான அரசு வழங்கும் கடன் உதவி திட்டத்தில் NEEDS மற்றும் AABCS திட்டத்திற்கான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டங்களில் ஈடிசியாவின் சார்பாக தலைவர் திரு.P.கந்தசாமி அவர்கள் கலந்துகொண்டார்.
