Add Listing
October2025 – Eedissia Activities

செயலாளர் அறிக்கை – அக்டோபர் 2025

06.10.2025 : திங்கட்கிழமை காலை 10 மணி முதல் ஈரோடு ஹோட்டல் ரத்னா ரெசிடென்சியில் நடைபெற்ற “உலகளாவிய அளவில் உணவுப்பொருள் உற்பத்தி மற்றும் வர்த்தக நிறுவனங்களை வடிவமைத்தல்” என்ற தலைப்பில் Export Promotion Center மற்றும் TNAPEX இணைந்து நடத்திய சிறப்பு கூட்டத்தில் ஈடிசியா சார்பாக ஈடிசியாவின் முன்னாள் தலைவர்கள் திரு.திருமூர்த்தி, திரு.வெங்கடேஸ், இணைச் செயலாளர் திரு.சக்திவேல் மற்றும் மேலாளர் திரு.கிளமெண்ட் ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

06.10.2025 : திங்கட்கிழமை மாலை 6மணிக்கு ஈடிசியாவின் நிர்வாகக்குழு கூட்டம் ஈடிசியா அலுவலகத்தில் தலைவர் திரு.கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஈடிசியாவின் செயலாளர் திரு.சரவணபாபு, பொருளாளர் திரு.பரத் மற்றும் நிர்வாகக்குழுவினர் கலந்துகொண்டனர்.

10.10.2025 : வெள்ளிக்கிழமை காலை 10மணிக்கு ஈரோடு மாவட் தொழில் மையத்தில் நடைபெற்ற கைவினைக் கலைஞர்களுக்கான கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டத் தொழில் மையத்தின் பொது மேலாளர் திரு.திருமுருகன் மற்றும் அதிகாரிகளுடன் ஈடிசியா சார்பாக ஈடிசியாவின் இணைச் செயலாளர் திரு.சக்திவேல் மற்றும் மேலாளர் திரு.கிளமெண்ட் ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

10.10.2025 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கோபி மற்றும்ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் மேலாண்மைக் குழு கூட்டங்கள் மாவட் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஈடிசியாவின் முன்னாள் தலைவர்கள் திரு.ரவிச்சந்தர், திரு. திருமூர்த்தி, செயலாளர் திரு.சரவணபாபு மற்றும் மேலாளர் திரு.கிளமெண்ட் ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

13.10.2025 : திங்கட்கிழமை சென்னையில் நடைபெற்ற உற்பத்திப்  பொருட்களுக்கான Food Industry Policy தமிழ்நாட்டின் தொழில்துறை உருவாக்கத்திற்காக சார்ந்த அமைப்புகளுடன் அரசு ஏற்பாடு செய்திருந்த சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம், தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் உயர்திரு. உதயச்சந்திரன் IAS., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஈடிசியாவின் முன்னாள் தலைவர்கள் திரு.திருமூர்த்தி, திரு.வெங்கடேஸ், திரு.பாலசுப்பிரமணியம், துணைத் தலைவர்கள் திரு.ராம்பிரகாஷ், திரு.சுரேஷ், உறுப்பினர்கள் திரு.கே.மோகன். திரு.ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டு துறை சார்ந்த கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள்.

13.10.2025 : திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு ஈடிசியாவின் 4வது செயற்குழு கூட்டம் தலைவர் திரு.கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆடிட்டர் திரு.அசோக் அவர்கள் கலந்துகொண்டு சமீபத்தில் அரசு அறிவித்துள்ள வரிக்குறைப்பினால் தொழில்துறை அடையும் நன்மைகள் குறித்து விளக்க உரையாற்றினார். பின்னும் உறுப்பினர்களின் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு தெளிவாக பதிலளித்தார். இக்கூட்டத்தில் ஈடிசியாவின் செயலாளர் திரு.சரவணபாபு, பொருளாளர் திரு.பாத் முன்னாள் தலைவர்கள், நிர்வாகக்குழுவினர் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

24.10.2025 : காலை 9 மணி முதல் தமிழ்நாடு பதப்படுத்துநர்கள் செயற்குழு மாநாடு (Tamil Nadu Food Processors’ Executive Conclave) சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்துறை மற்றும் ஈடிசியா இணைந்து,

24.10.2025 : ஹோட்டல் டர்மெரிக்கில் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி, ஆப, தொழில் ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.எல்.நிர்மல்ராஜ், ஈரோடு மாவட்ட பொதுமையத்தின் மேலாளர் திரு.திருமுருகன் கலந்துகொண்ட ஆகியோர் தலைவர் இக்கூட்டத்தில் ஈடிசியா சார்பாக திரு.கந்தசாமி, செயலாளர் திரு.சரவணபாபு, முன்னாள் தலைவர் திரு. திருமூர்த்தி, துணைத் தலைவர் திரு. சுரேஷ், இணைச் செயலாளர் திரு.சக்திவேல் மற்றும் நிர்வாகக்குழு செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

28.10.2025 : செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு வழங்கும் மானிய கடனுதவித் தொழில்முனைவோர்க்காக திட்டமான NEEDS, AABCS திட்டங்களின் கீழ் விண்ணப்பித்த பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இத்தேர்வு பணிக்குழுவில் ஈரோடு மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் திரு.திருமுருகன், வங்கி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் நமது ஈடிசியா சார்பாக ஈடிசியாவின் இணைச் செயலாளர் திரு. சக்திவேல், மேலாளர் திரு.கிளமெண்ட்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளைத் தேர்ந்தெடுத்தனர்.

DRUCC Meeting

DRUCC உறுப்பினர் : திரு. V. சரவணன், முன்னாள் தலைவர், ஈடிசியா.
ஈரோடு-சேலம் கோட்ட இரயில்வே பயனாளிகள் ஆலோசனைக் குழு (Divisional Railway Users’ Consultative Committee- DURCC), Salem Division இதில், ஈரோடு மாவட்ட தொழில்துறைகள் சார்பாக இக்கமிட்டியின் உறுப்பினராக БЛЮБЫ ஈடிசியாவின் முன்னாள் தலைவர் திரு. திரு.V.சரவணன் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார். ஈரோடு மாவட்ட ரயில் பயணிகளின் கருத்துக்களையும். MSME நிறுவனங்களுக்குத் தேவையான ரயில்வேயின் சேவைகளுக்காகவும் தொடர்ந்து, தமது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

சென்ற மாதத்தில் நடைபெற்ற ஈரோடு-சேலம் கோட்ட இரயில்வே பயனாளிகள் ஆலோசனைக் குழு (DURCC) கூட்டத்தில் DURCC உறுப்பினாராக ஈடிசியா சார்பாக திரு.V.சாவணன் அவர்கள் முன்வைத்த கருத்துக்களையும், அதற்கு கிடைத்த பதில்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஈரோடு ரயில் நிலையத்திற்கு வரும் ரயில்கள் பல நேரங்களில் ரயில்நிலையத்திற்கு வெளியே காத்திருந்து, நடைமேடை காலியான பின்ப நிலையத்திற்குள் வருகிறது. இதனால், பயணிகளின் நேரம் வீணாகிறது. காலதாமதத்தினால் பெரும் பரபரப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க கூடுதல் நடைமேடை அமைத்தால், ரயில்கள் வெளியே காத்திருக்கத் தேவையில்லை என்கிற கருத்தை நமது ஈடிசியாவின் முன்னாள் தலைவர் திரு. சரவணன் அவர்கள் வலியுறுத்தினார். இதன் பயனாக, அரசின் அனுமதிக்கு உட்பட்டு, அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கூடுதல் தளத்துடன் கூடிய ஈரோடு ரயில்நிலைய முகப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுவடிவமைப்பு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க சரக்கு கொட்டகையை (Good Shed) பெருந்துறை சிப்காட் அருகே இடமாற்றம் செய்ய வேண்டும் என்பதை திரு.V.சரவணன் அவர்கள் வலியறுத்தினார். இக்கருத்து பரிசீலிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
  • தலைமையகத்தின் அனுமதியின் பேரில் பெருந்துறை Good Shed உள்கட்டமைப்பு மற்றும் தொழிலாளர்களுக்கான வசதிகள் செய்யப்படுகிறது.
  • ஈரோடு-சென்னிமலை சாலையில் கே.கே.நகரில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தை விரிவுபடுத்துவதற்கு மாநில அரசுடன் இணைந்து ரயில்வே நடவடிக்கை. எடுக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை திரு.V.சாவணன் அவர்களால் முன்வைக்கப்பட்டது. தற்போது அதற்கான திட்டங்கள் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. திட்டம் அனுமதி பெறப்பட்டவுடன் டெண்டர் அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பு நமது நீண்ட நாளைய கோரிக்கைக்கு கிடைத்த நல்ல செய்தியாகும்.
  • ஈரோடு-கரூர் ரயில்வே பாதையை இரட்டைப் பாதையாக மாற்ற வேண்டும் என்ற கருத்தை இக்கூட்டத்தில் நமது ஈடிசியாவின் முன்னாள் தலைவர் திரு. சாவணன் அவர்கள் எடுத்துக்கூறினார். இதற்கான தீர்வு காணப்பட்டு, இறுதி களஆய்வு முடிந்துள்ளது. நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டம் ரயில்வே வாரியத்தின் மதிப்பீட்டில் உள்ளது.

இதுபோல தொழில்துறைக்கும். பொதுமக்களுக்கும் தேவையான பல கருத்துக்கள். நமது ஈழசியா சார்பாக ரயில்வே துறை கூட்டங்களில் முன்வைக்கிறோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

Prev Post
September2025 – Eedissia Activities
Next Post
June -2025 Eedissia Activity

Add Comment

Your email is safe with us.