செயலாளர் அறிக்கை - ஜூலை 2025
02.07.2025 : புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு ஈடிசியாவின் நிர்வாகக்குழு கூட்டம் தலைவர் திரு.P.கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் செயலாளர் திரு. A.சரவணபாபு, பொருளாளர் திரு.M.K.K.பரத் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.
04.07.2025 : மாலை 4.30 மணிக்கு மின்கட்டண உயர்வு தொடர்பாக ஆன்லைனில் Zoom Meeting-ஆக ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை கோவை மாவட்டம், கொடிசியா சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆன்லைனில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஈடிசியாவின் சார்பாக தலைவர் திரு. P.கந்தசாமி அவர்கள் கலந்துகொண்டார்.
08.07.2025 : செவ்வாய்கிழமை மாலை ஈடிசியாவின் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஈடிசியாவின் மாத இதழ் குறித்த கலந்து ஆலோசிக்கப்பட்டது. சங்கத்தின் தலைவர் திரு.P.கந்தசாமி அவர்கள் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் செயலாளர் திரு. A.சரவணபாபு, பொருளாளர் திரு.M.K.K.பரத் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.
09.07.2025 : புதன்கிழமை காலை 10.30 மணிக்கு ஈரோடு மாவட்ட தொழில் மையத்தில் நடைபெற்ற கலைஞர் கைவினைத் திட்டத்தின் தேர்வு பணிக்குழு கூட்டத்தில் ஈடிசியாவின் சார்பாக தலைவர் திரு.P.கந்தசாமி அவர்கள் கலந்துகொண்டார்.
10.07.2025 : வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு ஈரோடு மாவட்ட தொழில் மையத்தில் நடைபெற்ற கலைஞர் கைவினைத் திட்டத்தின் தேர்வு பணிக்குழு கூட்டத்தில் மாவட்ட தொழில் மையத்தின் பொதுமேலாளர் திரு. G.திருமுருகன், மற்ற அவர்கள் அதிகாரிகளுடன் ஈடிசியாவின் சார்பாக தலைவர் திரு.P.கந்தசாமி கலந்துகொண்டார்.
11.07.2025 : மாலை 5 மணிக்கு மாண்புமிகு மத்திய MSME மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை இணை அமைச்சர் அவர்களுடன் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம் கோவை கொடிசியா டிரேட் சென்டரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஈடிசியா சார்பாக ஈடிசியாவின் முன்னாள் தலைவர் திரு. திருமூர்த்தி, இணைச் செயலாளர் திரு. சக்திவேல் மற்றும் செயற்குழு உறுப்பினர் திருமதி. சுபஸ்ரீ ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
15.07.2025 : செவ்வாய்க்கிழமை ஈரோடு மாவட்டத்திற்கு பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் திரு.கந்தசாமி அவர்களை ஈடிசியாவின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து, ஈடிசியா மாத இதழை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.
16.07.2025 : புதன்கிழமை மாலை 4.30மணிக்கு Single Window Committee Meeting மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஈடிசியாவின் சார்பாக தலைவர் திரு. P.கந்தசாமி அவர்கள் கலந்துகொண்டார்.
16.07.2025 : புதன்கிழமை மாலை அரசு வழங்கும் அண்ணல் அம்பேத்கார் கடனுதவி திட்டம் (AABCS), வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான கடனுதவித் திட்டம் NEEDS ஆகியவற்றிற்கான பயனாளிகள் தேர்வுக்குழு கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு அதிகாரிகள், வங்கி மேலாளர்களுடன் தேர்வுக்குழு உறுப்பினராக ஈடிசியாவின் திரு. P.கந்தசாமி அவர்கள் கலந்துகொண்டார்.
19.07.2025 : சனிக்கிழமை உணவுத்துறை சார்பாக ஈரோடு மாவட்டத்தில் முதன்முறையாக நடைபெறும் Fostac பயிற்சியின் துவக்கவிழா நமது ஈடிசியாவில் நடைபெறுவதை முன்னிட்டு, விழாவைத் துவக்கிவைப்பது குறித்து மாவட்ட ஆட்சியருடன் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வில், ஈடிசியாவின் தலைவர், செயலாளர், பொருளாளர், முன்னாள் தலைவர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
24.07.2025 : வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு ஈரோடு மாவட்ட தொழில் மையத்தில் நடைபெற்ற கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் கடனுதவி பெறும் பயனாளர்களைத் தேர்ந்தெடுக்கும் குழு உறுப்பினராக அரசு அதிகாரிகள் மற்றும் வங்கி மேலாளர்களுடன் ஈடிசியாவின் இணைச் செயலாளர் திரு. S.சக்திவேல் அவர்கள் கலந்து கொண்டார்.
24.07.2025: வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு கொங்கு இன்ஜினியரிங் கல்லூரியின் கொங்கு Prayas subcommittee meeting நடைபெற்றது. இதில் கமிட்டி உறுப்பினர்களாக ஈடிசியாவின் உடனடி முன்னாள் தலைவர் திரு.V.T.ஸ்ரீதர், முன்னாள் தலைவர்கள் திரு. P.திருமூர்த்தி, திரு.R.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
25.07.2025 : வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் CII Erode நடத்திய தொழில் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கான HR Conclave ஈரோட்டில் நடைபெற்றது. இதில் ஈடிசியாவின் சார்பாக சங்கத்தின் தலைவர் திரு. கந்தசாமி மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
26.07.2025 : அன்று ஈடிசியாவின் முதலாவது செயற்குழு கூட்டம் தலைவர் திரு.கந்தசாமி அவர்கள் தலைமையில் நமது ஈடிசியா அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஈடிசியாவின் செயலாளர், பொருளாளர், சங்க நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
26.07.2025 : உணவுத்துறை சார்பாக Fostac பயிற்சியின் துவக்கவிழா நமது ஈடிசியா அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலை வகித்து துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்தகுமார், உணவு பாதுகாப்புத் துறையின் ஈரோடு மாவட்ட நியமன அலுவலர் Dr.G.வரலட்சுமி, ஈடிசியாவின் தலைவர் திரு.கந்தசாமி மற்றும் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் உணவுத்துறை சார்ந்த 175 சிறுகுறு நிறுவனங்கள் பயன்பெற்றனர்.
31.07.2025 : வியாழக்கிழமை காலை ஈடிசியா அலுவலகத்தில் உணவுப் பொருட்கள் உற்பத்தி தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக JKKM கல்லூரி பேராசியர்களுடன் ஈடிசியாவில் ஒரு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் JKKM கல்லூரி பேராசிரியர்களுடன் ஈடிசியாவின் துணைத் தலைவர் திரு. P.சுரேஷ் அவர்கள் கலந்துகொண்டார்.
BEDISIA SAKTHIMASALA HALL
